வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: அமைதியான மாநிலத்தில் பொது அமைதியை சீர் குலைக்கும் வகையில் எதுவும் பதிவிடக்கூடாது என யூடியூபர் மணீஷ் காஷ்யப் வழக்கில், உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் பீஹாரைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சில மாதங்களுக்கு முன் வதந்தி பரவியது. இது குறித்து சமூக வலைதளத்தில் வதந்தி பரப்பியதாக பீஹாரைச் சேர்ந்த யூடியூபர் மணீஷ் காஷ்யப்பை, தமிழக போலீசார், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இந்நிலையில், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தன்னை கைது செய்ததை எதிர்த்து, மணீஷ் காஷ்யப் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு இன்று(மே 08) உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது உச்சநீதிமன்ற நீதிபதி, அமைதியான மாநிலத்தில் பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் எதையும் பதிவிடக் கூடாது என கருத்து தெரிவித்தார். மேலும் தன் மீதான தேசிய பாதுகாப்புச்சட்டத்தை ரத்து செய்யக்கோரிய யூடியூபர் மணீஷ் காஷ்யப் வைத்த கோரிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்க மறுத்தது.