ஆர்.கே.பேட்டை: ஆர்.கே.பேட்டை கிராமத்தில், பள்ளிப்பட்டு சாலையில் இருந்து, பொன்னியம்மன் கோவில் தெரு பிரிந்து செல்கிறது.
பொன்னியம்மன் கோவில் தெருவில், சமீபத்தில் 'பேவர் பிளாக்' சாலை அமைக்கப்பட்டது. இந்நிலையில், பொன்னியம்மன் கோவில் தெரு மற்றும் பள்ளிப்பட்டு சாலை இணைப்பு பகுதியில், மழை நீர் தேங்கி நிற்கிறது.
மழை நீர், பொன்னியம்மன் கோவில் தெருவில் வழிந்தோடும் விதமாக சாலை அமைக்கப்படவில்லை. மூன்று ஆண்டுகளுக்கு முன், பள்ளிப்பட்டு சாலை மற்றும் பஜார் பகுதியில் வடிகால்வாய் அமைக்கப்பட்டது.
இந்த வடிகால்வாய், பல்வேறு இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், மழை நீர் அந்த கால்வாயிலும் பாயவில்லை.
இதனால், தெருவில் நடந்து செல்பவர்களும், சாலையில் வாகனங்களில் செல்பவர்களும் அவதிப்பட்டு வருகின்றனர்.
மழை நீர் கால்வாயை ஆக்கிரமித்துள்ள பகுதியை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.