திருப்போரூர்: பிளஸ் ௨ பொதுத்தேர்வில், திருப்போரூர் ஒன்றியத்தில் உள்ள அரசு பள்ளிகளில், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. ஒன்றிய அளவில், திருப்போரூர் பெண்கள் பள்ளி முதலிடமும், ஆண்கள் பள்ளி இரண்டாம் இடமும் பிடித்துள்ளன.
திருப்போரூர் ஒன்றியத்தில், திருப்போரூர், மானாமதி, கேளம்பாக்கம்,செம்பாக்கம், மாம்பாக்கம், நெல்லிக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில், அரசு மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன.
மேற்கண்ட பள்ளிகளில் மட்டும், நடந்து முடிந்த பிளஸ் டூ பொதுத்தேர்வில், 1,225 மாணவ - மாணவியர் தேர்வு எழுதினர்.
இதில், நேற்று வெளியான தேர்வு முடிவில், 1,034 மாணவ - மாணவியர் தேர்ச்சி பெற்றனர். சராசரியாக, கடந்த ஆண்டை விட, தேர்ச்சி சதவீதம் 84.6லிருந்து 87.67 சதவீதமாக அதிகரித்துள்ளது.
திருப்போரூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 174 மாணவியர் தேர்வு எழுதியதில், 170 பேர் தேர்ச்சி பெற்றனர்.
மானாமதி அரசு மேல்நிலைப்பள்ளியில், 81 மாணவர்கள் தேர்வு எழுதியதில், 71 பேர் தேர்ச்சி பெற்றனர். பள்ளி தேர்ச்சி விகிதம் 88 சதவீதம்.
கேளம்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில், 225 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 184 பேர் தேர்ச்சி பெற்றனர். பள்ளி தேர்ச்சி விகிதம் 82 சதவீதம்.
செம்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில், 91 மாணவர்கள் தேர்வு எழுதியதில், 87 பேர் தேர்ச்சி பெற்றனர். பள்ளி தேர்ச்சி விகிதம் 96 சதவீதம்.
மாம்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில், 218 மாணவர்கள் தேர்வு எழுதியதில், 189 பேர் தேர்ச்சி பெற்றனர். பள்ளி தேர்ச்சி விகிதம் 87 சதவீதம்.
கோவளம் அரசு மேல்நிலைப்பள்ளியில், 120 மாணவர்கள் தேர்வு எழுதியதில், 102 பேர் தேர்ச்சி பெற்றனர். பள்ளி தேர்ச்சி விகிதம் 85 சதவீதம்.
நெல்லிக்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளியில், 122 மாணவர்கள் தேர்வு எழுதியதில், 114 பேர் தேர்ச்சி பெற்றனர். பள்ளி தேர்ச்சி விகிதம் 93.42 சதவீதம்.