செய்யூர்: இடைக்கழிநாடு பேரூராட்சியில், 21 வார்டுகள் உள்ளன. பேரூராட்சி அலுவலகம், கடப்பாக்கம் பேருந்து நிறுத்தம் அருகே உள்ளது.
பேரூராட்சி அலுவலகத்தில், தலைவர் அறையில், சுமார் 2.5 லட்ச ரூபாய் மதிப்பீட்டில், கடந்த 2 மாதங்களாக சீரமைப்பு பணிகள் நடந்து வந்தன.
இந்நிலையில், நேற்று தலைவர் அறையின் திறப்பு விழா நடந்தது.
இதில், சிறப்பு விருந்தினராக, காஞ்சிபுரம் தெற்கு தி.மு.க., மாவட்ட செயலர் சுந்தர் பங்கேற்று, அறையை திறந்து வைத்தார்.
காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம்,இடைக்கழிநாடு பேரூராட்சி தலைவர் சம்யுக்தா, பேரூராட்சி செயல் அலுவலர் - பொறுப்பு, குணசேகரன் ஆகியோர் உடன் இருந்தனர்.