வால்பாறை;வால்பாறையில், கன்னிமார், கருப்பராய சுவாமி கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
வால்பாறை நகர், டோபி காலனி, கன்னிமார், கருப்பராய சுவாமி கோவிலின், 45ம் ஆண்டு திருவிழா, கடந்த, 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. கோவிலில், தினமும் இரு வேளை சிறப்பு அபிேஷக, அலங்கார வழிபாடு நடக்கிறது.
விழாவில், வரும், 12ம் தேதி, சுப்ரமணிய சுவாமி கோவிலில் இருந்து, பக்தர்கள் தீர்த்தம் எடுத்து வருகின்றனர். அதன்பின், சுவாமிக்கு தீர்த்தம் ஊற்றி, சிறப்பு அபிேஷக, அலங்காரபூஜைகள் நடக்கிறது.
வரும், 13ம் தேதி சிறுவர் பூங்கா ஆதிபராசக்தி கோவிலில் இருந்து பட்டு சீர்வரிசை ஊர்வலம் நடக்கிறது. தொடர்ந்து, அன்னதானம் வழங்கும் விழாவும் நடக்கிறது. கோவில் திருவிழாவை முன்னிட்டு, பக்தர்கள் விரதம் இருந்து, சுவாமியை வழிபடுகின்றனர். விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.