ஆவடி,ஆவடி, கோவர்த்தனகிரி, பாரதி நகரைச் சேர்ந்த 16 வயது சிறுவன், தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு பயின்று வந்தார். நேற்று காலை 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின.
இதில் தமிழ் மற்றும் கணினி பாடத்தில் குறைந்த மதிப்பெண் பெற்று தோல்வி அடைந்த மாணவர், நேற்று காலை வீட்டின் தனி அறையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்த புகாரின் படி, ஆவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
மாணவி தற்கொலை
புதுவண்ணாரப்பேட்டை, ஆவூர் முத்தையா தெருவைச் சேர்ந்தவர் தாருண்யா, 17. இவரது பெற்றோர், சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட, பாட்டி மல்லிகா வீட்டில் தாருண்யா வளர்ந்து வந்தார்.
அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில், பிளஸ் 2 படித்தார். இந்த நிலையில், நேற்று பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாயின. இதில் தோல்வியடைந்தார்.இதனால் மனமுடைந்த தாருண்யா, வீட்டில் அறையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து புதுவண்ணாரப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.