திருநெல்வேலி: திருநெல்வேலியில் நண்பர் வீட்டுக்கு வந்திருந்த சென்னை வாலிபர்கள் இருவர் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி பலியாயினர்.
சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த சக்தி 25 குடும்பத்தினருடன் திருநெல்வேலி மாவட்டம் திருவேங்கடநாதபுரத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்திருந்தார். சக்தியின் நண்பர்களான சென்னை ஆயிரம் விளக்கு ஸ்ரீராம் 25 மோர்ஸ் ரோடு வினோத் 24 மாடர்ன் ஸ்கூல் தெரு அருண் 24 ஆகியோர் நேற்று திருவேங்கடநாதபுரம் வந்திருந்தனர்.
அங்கு தாமிரபரணி ஆற்றில் குளித்தனர். ஆழமான பகுதியில் சிக்கிக்கொண்ட மூவரும் நீரில் இழுத்துச் செல்லப்பட்டனர். அவர்களை சக்தியும் தம்பி முரளியும் மீட்கும் பணியில் ஈடுபட்டனர். வினோத் மட்டும் மீட்கப்பட்டார். அருண், ஸ்ரீராம் நீரில் மூழ்கி பலியாயினர். தீயணைப்பு வீரர்கள் இருவரின் உடல்களையும் மீட்டனர். சுத்தமல்லி போலீசார் விசாரித்தனர்.