சென்னை: ஆவின் நிறுவனம், 22 ரூபாய் விலையில், அரை லிட்டர் பசும்பால் பாக்கெட் இன்று முதல் விற்பனைக்கு வந்து உள்ளது.
ஆவின் நிறுவனம் சார்பில், ஏற்கனவே இருமுறை சமன்படுத்தப்பட்ட பால், சமன்படுத்தப்பட்ட பால், நிலைப்படுத்தப்பட்ட பால், நிறை கொழுப்பு பால் போன்றவை விற்கப்படுகின்றன. அவை, சிகப்பு, ஆரஞ்சு, பச்சை, நீலம் போன்ற வண்ண பாக்கெட்டுகளில் விற்கப்படுகின்றன.
இன்று முதல் புதிதாக, அரை லிட்டர் பசும்பால், 'பர்புள்' வண்ண பாக்கெட்டில் விற்பனைக்கு வருகிறது. இந்த பால், 3.5 சதவீதம் கொழுப்பு சத்து நிறைந்தது. அரை லிட்டர் பசும்பால், 22 ரூபாய் விலையில் விற்கப்படுகிறது.
இந்த பால், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில், இன்று முதல் விற்கப்படுகிறது.