கோவை:நடந்து முடிந்த பிளஸ் 2 தேர்வில், பீளமேடு நேஷனல் மாடல் பள்ளி மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இப்பள்ளியை சேர்ந்த 142 மாணவர்கள், 113 மாணவியர் என,255 பேர் தேர்வு எழுதினர்; அனைவரும் தேர்ச்சி அடைந்தனர். இப்பள்ளி, பல ஆண்டுகளாக 100 சதவீத தேர்ச்சி பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
மாணவி வர்ஷினி 600க்கு 590 மதிப்பெண் எடுத்து, பள்ளி அளவில் முதலிடம் பிடித்துள்ளார். தவிர, வேதியியல் பாடத்தில் மூவர், கணினி அறிவியல் பாடத்தில் ஒன்பது மாணவர்கள், பயாலஜி பாடத்தில் இருவர், தாவரவியல் பாடத்தில் இருவர், விலங்கியல் பாடத்தில் ஒருவர், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் இருவர், பொருளியல் பாடப்பிரிவில் ஒருவர், வணிகவியல் பாடத்தில் ஒருவர், கணக்கு பதிவியல் பாடப்பிரிவில் எட்டு மாணவர்கள், 100க்கு 100 மதிப்பெண் எடுத்துள்ளனர்.
இப்பள்ளியில் அனைத்து வகுப்புகளுக்கும் சேர்க்கை நடக்கிறது. விவரங்களுக்கு, 99444 11111 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.