அமெரிக்க துப்பாக்கி சூட்டில் தெலுங்கானா நீதிபதி மகள் பலி

Added : மே 09, 2023 | கருத்துகள் (2) | |
Advertisement
டெக்சாஸ், அமெரிக்காவில், வணிக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரும் பலியாகி உள்ளதாக, அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டல்லால் நகரில், வணிக வளாகம் ஒன்றில், மொரிசியோ கார்சியா என்ற நபர், சமீபத்தில் பொது மக்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதில், 5 வயது
Telangana judges daughter killed in US firing   அமெரிக்க துப்பாக்கி சூட்டில் தெலுங்கானா நீதிபதி மகள் பலி



டெக்சாஸ், அமெரிக்காவில், வணிக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரும் பலியாகி உள்ளதாக, அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டல்லால் நகரில், வணிக வளாகம் ஒன்றில், மொரிசியோ கார்சியா என்ற நபர், சமீபத்தில் பொது மக்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டார்.

இதில், 5 வயது குழந்தை உட்பட எட்டு பேர் உயிரிழந்தனர்.

இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார், பதில் தாக்குதல் நடத்தியதில், மொரிசியோ கார்சியா சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்நிலையில், உயிரிழந்த எட்டு பேரில் ஒருவர், தெலுங்கானாவைச் சேர்ந்த இளம் பெண் ஐஸ்வர்யா, 27, என்பது தெரிய வந்துள்ளது.

ஹைதராபாதில் உள்ள சரூர் நகரைச் சேர்ந்த மாவட்ட நீதிபதி நர்சிரெட்டியின் மகள் ஐஸ்வர்யா, இரண்டு ஆண்டுகளாக, டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்தார்.

ஐஸ்வர்யா நண்பருடன் வணிக வளாகத்திற்கு சென்ற போது, இச்சம்பவம் நடந்துள்ளது.

இதில், ஐஸ்வர்யாவின் நண்பர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த ஐஸ்வர்யாவின் உடலை, நம் நாட்டிற்கு எடுத்து வருவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (2)

Natchimuthu Chithiraisamy - TIRUPUR,இந்தியா
11-மே-202314:47:22 IST Report Abuse
Natchimuthu Chithiraisamy தான் செய்த தவறுகள் தன் பிள்ளையை குறிவைக்கிறது. நீதி தவறக்கூடாது.
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
09-மே-202314:17:36 IST Report Abuse
Sampath Kumar munpu ellam inthir pali entru seythi போடுவார்கள் இப்போ எல்லாம் மாநில பேரு போட்டு போடுகிறார்கள் எது oru viyapara yukthi thaan
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X