செஞ்சி,-கொலை செய்து புதைக்கப்பட்ட பெண் குறித்து தகவல் தெரிந்தால் தெரிவிக்கும்படி போலீசார் கேட்டு கொண்டுள்ளனர்.
விழுப்புரம் அடுத்த சாலவனுார் சுடுகாட்டிற்கு அருகே, ஏரியில் 25 வயது மதிக்கதக்க பெண் சடலம் புதைக்கப்பட்ட நிலையில் கடந்த மாதம் கண்டெடுக்கப்பட்டது.
கஞ்சனுார் போலீசார் உடலைக் கைப்பற்றி வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். பெண்ணின் முகம் அழுகிய நிலையில் இருந்ததால், முதல் கட்ட விசாரணையில் எந்த துப்பும் கிடைக்கவில்லை.
இதையடுத்து போலீசார், இறந்த பெண் அணிந்திருந்த அணி கலன்களின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.
இறந்த பெண் பிங்க் நிறத்தில் லெகின்ஸ், கருநீல நிறத்தில் பூ போட்ட டாப்சும், பிங்க் நிறத்தில் உள்ளாடையும் அணிந்திருந்தார்.
இவர், கவரிங் செயின், ஜிமிக்கி, சிறிய தங்க மூக்குத்தி, சிகப்பு நிற அரைஞான் கயிறு, பச்சை, நீலநிற துணி சுற்றிய கல் பதித்த பிளாஸ்டிக் வளையல் ஆகியவற்றை அணிந்திருந்தார்.
இந்த அடையாளங்களுடன் யாரேனும் காணாமல் போயிருந்தால் செஞ்சி டி.எஸ்.பி., அலுவலகம் அல்லது கஞ்சனுார் போலீஸ் நிலையத்தை தொடர்பு கொள்ளும் படி போலீசார் கேட்டு கொண்டுள்ளனர்.