விருதுநகர், ; விருதுநகர் கேர் ஏ.கே.பி.எஸ்,, அனெக்ஸ் மருத்துவமனையில் குழந்தைகளுக்கான அறுவை சிகிச்சை மருத்துவ ஆலோசனை முகாம் நடந்தது.
மே 1 முதல் 15 வரை காலை 9:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை நடக்கும் முகாமில் விரை வீக்கம், ஆண் பிறப்புறுப்பின் முன்தோல் பிரச்னை, விரைப்பையில் இல்லா விரை, அடிக்கடி வரும் நீங்காத வயிறு வலி, நெறிக்கட்டி பிரச்னை, குடல் இறக்கம் ஆகிய சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.
இந்த முகாமில் அறுவை சிகிச்சை தேவைப்படும் நபர்களுக்கு சலுகை கட்டணத்தில் சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அறுவை சிகிச்சைக்கு முன் தேவைப்படும் பரிசோதனைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.
இதுவரை நடந்த முகாமில் பரிசோதித்த 5 பேருக்கு அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். குழந்தைகள் நல டாக்டர் நிகில், அறுவை சிகிச்சை நிபுணர் அருண்குமார் சிகிச்சை அளிக்கின்றனர்.