திருப்புல்லாணி, : திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயில் அருகே மாவட்ட நூலகத்துறை சார்பில் நடமாடும் நூலக பஸ் நிறுத்தப்பட்டதால் வாசகர்கள் வரவேற்பு தெரிவித்தனர்.
மே 2ல் கலெக்டர் ஜானி டாம் வர்கிஸ் துவக்கி வைத்த நடமாடும் நுாலக பஸ்சில் ஆன்மிகம், மருத்துவம், வேளாண்மை போட்டித் தேர்வுகள், பருவ இதழ்கள், தினமலர் உள்ளிட்ட நாளிதழ்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.
பொதுமக்கள், மாணவர்களிடையே வாசிப்பு திறனை அதிகப்படுத்தும் விதமாக காலை 9:30 முதல் மாலை 5:30 மணி வரை மாவட்டத்தின் முக்கிய பகுதிகள் மற்றும் சுற்றுலாத்தலங்களுக்குநடமாடும் நுாலக பஸ் சென்று வருகிறது.
மாவட்ட நூலக அலுவலர் செல்வ சுப்பிரமணியன், பொறுப்பு அலுவலர் நரசிம்ம பல்லவன் உட்பட நூலக அலுவலர்கள் உடன் இருந்தனர்.