ராமநாதபுரம், : கமுதி ஒன்றியம் புதுக்குளம் ஊராட்சியில் பொந்தம்புளி கூட்டு குடிநீர் திட்டம் முடிக்கப்படாமல் உள்ளதால் அதனை செயல்படுத்த கோரி கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா வில் ஈடுபட்டனர்.
புதுக்குளம் ஊராட்சியில் 2007 ல் பொந்தம்புளி கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு குடிநீர் கிடைத்தது. சில ஆண்டுகளுக்கு பின் நாராயண கால்வாய் துார்வாரும் பணியின் போது குழாய் சேதமடைந்து குடிநீர் வழங்க முடியவில்லை. அதன் பிறகு குடிநீர் வராமல் ஊரைவிட்டு காலி செய்யும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
எனவே குடிநீர் திட்டத்தை செயல்படுத்தக்கோரி புதுக்குளம் கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி முக்கிய நபர்களை மட்டும் கலெக்டரிடம் மனு அளிக்க அழைத்து சென்றனர். குடிநீர் பிரச்னையை தீர்க்காவிடில் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளதாக மக்கள் கூறினர்.