கடலுார்-பிளஸ் 2 தேர்வில், கடலுார் மாவட்டத்தில் 7 அரசு பள்ளிகள் உட்பட 72 பள்ளிகள் நுாறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.
பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. அதில், கடலுார் மாவட்டத்தில் 92.04 சதவீத மாணவ மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்டத்தில் 72 பள்ளிகள் நுாறு சதவீத தேர்ச்சி பெற்றன.
இதில், கடலுார் மாவட்ட மாடல் பள்ளி, மங்களூர், கழுதுார், எறும்பூர், சி.முட்லுார், கண்டமங்கலம், முட்டம் ஆகிய 7 அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி அடைந்து சாதனை படைத்துள்ளன. மேலும், 3 அரசு உதவி பெறும் பள்ளிகள், 62 தனியார் மெட்ரிக் பள்ளி 100 சதவீத தேர்ச்சி அடைந்து சாதனை படைத்துள்ளன.