கடலுார்,-கடலுாரில் தந்தை இறந்த துக்கத்திலும் தேர்வு எழுதிய மாணவி, பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றார்.
கடலுர் பழைய வண்டிப்பாளையத்தை சேர்ந்தவர் ஞானவேல், 45; பொம்மை செய்யும் தொழிலாளி. இவரது மகள் கிரிஜா, கடலுார் திருப்பாதிரிப்புலியூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்2 தேர்வு எழுதி வந்தார். கடந்த ஏப்., 3ம் தேதி வேதியியல் தேர்வுக்கு முதல் நாள் அவரது தந்தை உடல்நலமின்றி உயிரிழந்தார்.
இருப்பினும் அரசு தேர்வு என்பதால், தந்தையின் வீட்டில் இருந்த நிலையில், துக்கத்திலும் மாணவி தேர்வு எழுதினார். அவர், 600க்கு 479 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றார்.