திருப்பரங்குன்றம், : மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரியில் இளங்கலையில் இரண்டு புதிய பட்டப் படிப்புகள் பி.எஸ்.சி., சி.எஸ்., செயற்கை நுண்ணறிவு, பி.எஸ்.சி., ஆடை வடிவமைப்பு மற்றும் பேஷன் தொழில்நுட்ப படிப்புகள் இந்த கல்வி ஆண்டு முதல் துவக்கப்பட உள்ளது.
கல்லுாரி செயலாளர் விஜயராகவன், முதல்வர் ராமசுப்பையா, இயக்குநர் பிரபு கூறியதாவது:
சமீப காலங்களில் பேஷன் வடிவமைப்பு அனைவராலும் மிகவும் விருப்பப்படும் துறையாக மாறி வருகிறது.
ஆடை வடிவமைப்பாளர்கள் இத்துறையில் தொழில்நுட்ப அறிவு மற்றும் நடைமுறை திறன்களை பெறுவது அவசியமாகிறது. அடுத்த 10 ஆண்டுகளில் அதிகளவில் வேலை வேலைவாய்ப்புகளை நிர்ணயிக்கும் படிப்பாக இது உள்ளது. படிப்பை முடித்தவுடன் சுயவேலைவாய்ப்பை உருவாக்கிக் கொள்ளும் வகையில் இந்த படிப்புகள் துவக்கப்பட்டுள்ளன, என்றனர்.