தர்மபுரி: தர்மபுரி, கனரா வங்கியில் பணியாற்றி வருபவர் நடராஜன், 56; மதுரையை சேர்ந்த இவர், தர்மபுரியில் தங்கி பணியாற்றி வருகிறார். அவருக்கு நேற்று திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.
இதையடுத்து அவர், 108 அவசரகால ஆம்புலன்ஸ் மூலம், தர்மபுரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவரிடம், 1.50 லட்சம் ரூபாய் மற்றும் மொபைல்போன் ஒன்று இருந்தது. இதை, ஆம்புலன்ஸ் டிரைவர் இளையராஜா, உதவியாளர் வேடியப்பன் ஆகியோர், மருத்துவமனையில் இருந்த பணியாளர்களிடம் கொடுத்தபோது, அதை அவர்கள் வாங்க மறுத்தனர்.
இதையடுத்து, நடராஜனின் நண்பர் விஜயகுமாருக்கு இதுகுறித்து தகவல் தெரிவித்து, அவர் அங்கு வந்த பின், இளையராஜா, வேடியப்பன் ஆகியோர், பணம் மற்றும் மொபைல் போனை ஒப்படைத்தனர். ஆம்புலன்ஸ் பணியாளர்களின் இச்செயலை அங்கிருந்தோர் பாராட்டினர்.