தர்மபுரி:
தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமையில் நேற்று பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடந்தது. அப்போது பெண் ஒருவர், தன் மகன்களுடன் தீக்குளிக்க முயன்றார். அவரை போலீசார் தடுத்து விசாரித்ததில், அவர், தர்மபுரி மாவட்டம் அதகப்பாடி அடுத்த மேல்குள்ளம்பட்டியை சேர்ந்த பாத்திமா, 40, என தெரிந்தது. இவர் கணவர் பெரியசாமி, 58; இவர், பெங்களூருவில் இரும்பு வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில், பாத்திமாவுக்கும் அருகே வசிக்கும் சிலருக்கும் இருந்த முன்விரோதத்தால், அடிக்கடி தகராறு மற்றும் அடிதடி ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிக்க செல்லும்
பத்மாவை அவர்கள் தாக்கி வந்துள்ளனர். இதுகுறித்து பலமுறை பாப்பாரப்பட்டி போலீசில் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லாததால், மனமுடைந்த பாத்திமா, கலெக்டர் அலுவலகத்தில், தன் 16 மற்றும், 14 வயதுடைய இரு மகன்களுடன் தீக்குளிக்க முயன்றது தெரிந்தது. நடவடிக்கை எடுப்பதாக கூறி, அவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement