சென்னை:சுதா கருத்தரிப்பு மருத்துவமனை மற்றும் வடமலையான் மருத்துவமனைக்கு தொடர்புடைய 30 இடங்களில், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
ஈரோடு மாவட்டத்தை தலைமையிடமாக வைத்து, சுதா ஹாஸ்பிடல் நிறுவனம் செயல்பட்டு வருகிறது; செயற்கை கருத்தரிப்பு மையத்தையும் நடத்தி வருகிறது.
ஈரோடு, கோவை, சென்னை, மதுரை, தேனி, பெங்களூரு, ஹைதராபாத் உட்பட, 10 கிளைகள் இதற்கு உள்ளன.
சுதா மருத்துவமனை வருமான வரி ஏய்ப்பு செய்வதாக, வருமான வரித்துறை புகார் சென்றது. அதன் அடிப்படையில், சுதா மருத்துவமனைக்கு தொடர்புடைய இடங்களில், வருமான வரி அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
சென்னை வேப்பேரியில் உள்ள மருத்துவமனை, மதுரை வடமலையான் மருத்துவமனை, திண்டுக்கல் கிளை, அலுவலகங்கள், நிர்வாகிகளின் வீடுகள் என, 30 இடங்களில் சோதனை நடந்தது.
ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.