கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு, நெகமம் சார் பதிவாளர் அலுவலகத்தில் 'சர்வர்' பிரச்னையால், பத்திரப்பதிவு தாமதமாக நடந்தது.
கிணத்துக்கடவு, நெகமம் பகுதிகளில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில், நேற்று காலை 'சர்வர்' பிரச்னை ஏற்பட்டதால், பணிகள் ஸ்தம்பித்தது. இதனால் பத்திரப்பதிவுக்காக வந்த மக்கள், நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் உருவானது.
மேலும், மற்ற நாட்களை விட விசேஷ நாட்களில் அதிக அளவு பத்திரப்பதிவு செய்ய முன்பதிவு செய்ய மக்கள் பதிவு செய்கின்றனர். இந்நிலையில், 'சர்வர்' கோளாறு ஏற்படுவது வாடிக்கையாகி விட்டது.
இதனால், அலுவலகத்தின் உள்ளேயும், வெளியேயும் பல மணி நேரம் மக்கள் காத்திருந்தனர். மதியம் வரை இப்பிரச்னை நீடித்தது. அதன்பின், 'சர்வர்' பிரச்னை சரியானது. இந்த பிரச்னை அடிக்கடி ஏற்படுவதை தடுக்க, இணைய சேவையை மேம்படுத்த வேண்டும். மற்றும் கூடுதல் இணைய சேவை வசதி ஏற்படுத்த வேண்டும், என, பத்திரப்பதிவு செய்ய வந்த மக்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.