பெண்ணுடன் உல்லாசமாக இருந்ததை முகநுாலில் பதிவேற்றம் செய்தவர் கைது| The person who uploaded the picture of flirting with the girl on Facebook was arrested | Dinamalar

பெண்ணுடன் உல்லாசமாக இருந்ததை முகநுாலில் பதிவேற்றம் செய்தவர் கைது

Added : மே 12, 2023 | |
திருக்கோவிலுார்: பெண்ணுடன் உல்லாசமாக இருந்ததை, முகநுாலில் பதிவேற்றம் செய்தவரை போலீசார் கைது செய்தனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அடுத்த அரியலுாரை சேர்ந்தவர் சீனிவாசன் மகன் ரவிச்சந்திரன், 42; இவர் ஒரு பெண்ணுடன் பழகி வந்தார். இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்தனர்.இதனை ரவிச்சந்திரன், அப்பெண்ணுக்கு தெரியாமல் மொபைல் போனில் படம் எடுத்து வைத்துக்திருக்கோவிலுார்: பெண்ணுடன் உல்லாசமாக இருந்ததை, முகநுாலில் பதிவேற்றம் செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அடுத்த அரியலுாரை சேர்ந்தவர் சீனிவாசன் மகன் ரவிச்சந்திரன், 42; இவர் ஒரு பெண்ணுடன் பழகி வந்தார். இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்தனர்.

இதனை ரவிச்சந்திரன், அப்பெண்ணுக்கு தெரியாமல் மொபைல் போனில் படம் எடுத்து வைத்துக் கொண்டார்.

இந்நிலையில், ரவிச்சந்திரனுடன் பழகுவதை அப்பெண் நிறுத்திக் கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த ரவிச்சந்திரன், தான் பதிவு செய்து வைத்திருந்த ஆபாச படத்தை முகநுாலில் பதிவேற்றம் செய்தார்.

இதனை வெளியில் சொன்னால் அந்த பெண்ணையும், அவரது கணவரையும் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தார். இது குறித்து அப்பெண் திருக்கோவிலுார் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். ரவிச்சந்திரன் மீது போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X