கடலுார்: கடலுார், புதுப்பாளையத்தில் வேந்தன் ஆர்கிடெக்ட்ஸ் அலுவலகத்தை அய்யப்பன் எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்.
கடலுார், புதுப்பாளையம் செயின்ட் ஆன்ஸ் மகளிர் மேல்நிலைப் பள்ளி பின்புறம் குருவப்பன் தெருவில் வேந்தன் ஆர்கிடெக்ட்ஸ் அலுவலகம் திறப்பு விழா நடந்தது.
அய்யப்பன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, புதிய அலுவலகத்தை திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார்.
தாசில்தார் விஜய் ஆனந்த், தி.மு.க., மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் புகழேந்தி, எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் நடராஜன், தொழிலதிபர் உமாசந்திரன் முன்னிலை வகித்தனர். வேந்தன் ஆர்கிடெக்ட்ஸ் உரிமையாளர்கள் இளவேந்தன், காவ்யா வரவேற்றனர்.
விழாவில் தி.மு.க., முன்னாள் மாவட்ட பொருளாளர் குணசேகரன், அரிமா தினகரன், கூட்டுறவு சங்கத் தலைவர்கள் ஆதி பெருமாள், ரவிச்சந்திரன், அரசு ஒப்பந்ததாரர் ராஜசேகர், மாநகராட்சி கவுன்சிலர்கள் சரத், கீர்த்தனா ஆறுமுகம், வினோத், ஊராட்சித் தலைவர்கள் பிரகாஷ், மனோகர், ஞானபிரகாசம், முன்னாள் ஊராட்சித் தலைவர் சுதாகர், வெங்கடேசன், வி.சி., கட்சி நகர துணை செயலாளர் ஹிட்லர் கிருஷ்ணன், அருண், சரண் உட்பட பலர் பங்கேற்றனர்.
முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கஜேந்திரன் நன்றி கூறினார்.