கூடலுார்:முதுமலை தொரப்பள்ளி சோதனை சாவடியில், சுற்றுலா பயணிகள் வாகனங்களில் இருந்து, தடை செய்யப்பட்ட 'பிளாஸ்டிக்' பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.
நீலகிரி மாவட்டத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், 21 வகையான 'பிளாஸ்டிக்' பொருள்கள் மற்றும் இரண்டு லிட்டர் வரை கொள்ளளவு கொண்ட 'பிளாஸ்டிக்' குடிநீர், குளிர்பான பாட்டில்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து, கர்நாடகா, கேரளாவிலிருந்து, நீலகிரிக்கு வரும் வாகனங்களை, முதுமலை கக்கனல்லா, தொரப்பள்ளி சோதனை சாவடியில் சோதனை செய்து, 'பிளாஸ்டிக்' பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.