கோவை:கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், 14, 16 மற்றும் 19 வயதுக்குட்பட்டோருக்கான மாவட்ட அணி தேர்வு நவ இந்தியா, ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி மைதானத்தில் நடக்கிறது.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் நடக்கும் மாநில அளவிலான, 14, 16 மற்றும் 19 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும், கோவை மாவட்ட அணிக்கான வீரர்கள் தேர்வில் பங்கேற்க, மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 19 வயதுக்குட்பட்டோருக்கான (1.9.2004க்கு பின் பிறந்தவர்கள்)தேர்வு மே 15ம் தேதி மதியம் 2 மணிக்கும், 16 வயது பிரிவினருக்கான (1.9.2007க்கு பின் பிறந்தவர்கள்) தேர்வு, மே 17ம் தேதி காலை, 10 மணிக்கும், 14 வயதுக்கு உட்பட்டோருக்கான (1.9.2009க்கு பின் பிறந்தவர்கள்) தேர்வு மே 19ம் தேதி காலை, 10 மணிக்கும் நடக்கிறது.
இதில் பங்கேற்க விரும்புவோர், தேர்வு நடக்கும் நாளன்று பிறப்பு சான்றிதழ் மற்றும் ஆதார் கார்டு நகலுடன், ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி மைதானத்துக்கு சென்று கலந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு, 80729 48889 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.