அவிநாசி:அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலின் உப கோவிலான ஸ்ரீ பூமி நீளா நாயகி சமேத கரி வரதராஜ பெருமாளுக்கு திருத்தேர் செய்யும் பணிகள் துவக்கப்பட்டது.
அவிநாசி ஸ்ரீகரிவரதராஜ பெருமாளுக்கு, பஞ்சமூர்த்திகள் - 63 நாயன்மார்கள் வழிபாட்டுக்குழு அறக்கட்டளை சார்பில், திருத்தேர் செய்யும் பணிகள் நேற்று துவங்கியது. இதையொட்டி, பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன.
தம்மம்பட்டி ஸ்தபதி ரவி தலைமையிலான சிற்பிகள் திருத்தேர் செய்யும் பணிகளை துவக்கினர். அடுத்தாண்டு (2024) சித்திரை தேர்த்திருவிழாவுக்கு, பெருமாள் திருத்தேர் திருப்பணிகள் நிறைவுற்று, வெள்ளோட்டம் பார்க்கப்படும் என, அறக்கட்டளையினர் தெரிவித்தனர்.