அனுப்பர்பாளையம்;கிணற்றுக்குள் தவறி விழுந்த பெண் பரிதாபமாக பலியானார்.
திருப்பூர் அருகேயுள்ள சிறுபூலுவப்பட்டி திருமலை நகர் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம், இவரது மனைவி புனிதா, 35. இவர் நேற்று அருகில் உள்ள தோட்டத்து கிணற்றின் மேல் உள்ள மரத்தில் இருந்து புளியங்காய் பறித்துள்ளார்.
அப்போது, எதிர்பாராத விதமாக தவறி கிணற்றுக்குள் விழுந்தார். நீச்சல் தெரியாததால், தண்ணீரில் முழ்கி இறந்தார். திருப்பூர் வடக்கு தீயணைப்பு துறையினர் சடலத்தை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 15 வேலம்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.