பல்லடம்;பல்லடம் வட்டாரத்தில், ஆறு அரசு மேல்நிலைப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
பிளஸ் 2 தேர்வில், அருள்புரம் அரசு மேல்நிலைப்பள்ளி மட்டும் ஆறுதல் அளித்துள்ளது. இப்பள்ளியில் தேர்வு எழுதிய, 29 மாணவர், 26 மாணவியர் என, 55 பேரும் தேர்ச்சி பெற்றனர். இதனால், நுாறு சதவீத தேர்ச்சி பெற்ற பள்ளிகள் பட்டியலில் அருள்புரமும் இணைந்தது. ஆனால், பல்லடம் அரசு ஆண்கள், பெண்கள் பள்ளிகள் உட்பட, சாமி கவுண்டம்பாளையம், கணபதிபாளையம், கரடிவாவி எஸ்.எல்.என்.எம்., பள்ளி ஆகியவை நுாறு சதவீத தேர்ச்சி பெறவில்லை. பல்லடம் அரசு ஆண்கள் பள்ளி, 89 சதவீதம், பெண்கள் அரசு பள்ளி, 98.03 சதவீதம், கணபதிபாளையம் பள்ளி, 97.28 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளன.