விருதுநகர்--விருதுநகர் அல்லம்பட்டி காமராஜர் பை-பாஸ் ரோட்டில் மயானத்திற்கு அடிப்படை வசதி, பாதை அமைக்க கோரி இறந்தவரின் உடலை வைத்து மக்கள் நீதி மய்யத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
விருதுநகர் நகராட்சிக்கு சொந்தமான குப்பையை அல்லம்பட்டி கிடங்கில் கொட்டப்படுகின்றன. இதே பகுதியில் கூரைக்குண்டு ஊராட்சிக்கு சொந்தமான மயானம் உள்ளது. இங்கு எவ்வித அடிப்படை வசதியும் இல்லாதநிலையில் மயான பாதை குப்பைகள் நிரம்பி மோசமாகி உள்ளது.
இதனால் நேற்று அல்லம்பட்டியில் இறந்தவரின் உடலை கொண்டு செல்ல முடியாத நிலையில் அப்பகுதி மக்கள் ம.நீ.ம., மத்திய மாவட்ட செயலாளர் காளிதாஸ் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து கிழக்கு போலீசார், நகராட்சியினர் பேச்சுவார்த்தை நடத்தி தற்காலிகமாக மண்அள்ளும் இயந்திரம் மூலம் மயான பாதையை சீர்செய்தனர். இதனால் சாலை மறியல் கைவிடப்பட்டது. மேலும் இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.