சிங்கம்புணரி-சிங்கம்புணரி அருகே பிரான்மலை பகுதியில் மது அருந்திவிட்டு பாட்டில்களை உடைத்து செல்லும் 'குடி'மகன்களால் சுற்றுச்சூழல் பாதிப்படைகிறது.
இத்தாலுகாவில் பிரான்மலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள எஸ்.புதூர் மலைப்பகுதியில் தினமும் 'குடி'மகன்கள் பலர் அமர்ந்து மது அருந்துகின்றனர். காலி பாட்டில்களை அங்கேயே உடைத்து விட்டு செல்வதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. வனப்பகுதியில் அமர்ந்து மது அருந்தக்கூடாது என்று வனத்துறை சார்பில் ஆங்காங்கே எச்சரிக்கை வைத்திருந்தும் யாரும் கண்டு கொள்வதில்லை. உடைக்கப்பட்ட பாட்டில் துகள் மலை முழுவதும் பல இடங்களில் சிதறி கிடக்கிறது.
வனத்துறையினர் முக்கிய இடங்களில் செக்போஸ்ட் அமைத்து கண்காணித்து மலைப்பகுதிக்கு யாரும் மது பாட்டில்களை கொண்டு செல்லவோ, அங்கு மது அருந்தவோ தடை விதிக்கவேண்டும்.