''ஆளுங்கட்சி மேலிட பிரமுகர் பெயர்ல மிரட்டல் நடக்குதுங்க...'' என, கடைசி மேட்டருக்கு வந்தார் அந்தோணிசாமி.
''எந்த ஊர் விவகாரம் பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.
''கோவையில, ஆளுங்கட்சிக்கு சொல்லிக்கிற மாதிரி தலைவர்கள் யாரும் இல்லைங்க... இதனால, ஆளாளுக்கு, 'நான் தான் பெரிய ஆள்... எனக்கு தான் தலைமையிடம் செல்வாக்கு இருக்கு'ன்னு பந்தா பண்ணிட்டு இருக்காங்க...
''அந்த வகையில, அ.தி.மு.க.,வுல இருந்து தி.மு.க.,வுக்கு வந்த ஒருத்தர், 'கட்சி மேலிடம் எனக்கு நெருக்கம்'னு சொல்றாருங்க... சில மூத்த தலைவர்களுடன், தான் இருக்கிற படங்களை சமூக வலைதளங்கள்ல போட்டு, தம்பட்டம் அடிச்சிட்டு இருக்காருங்க...
![]()
|
''இப்ப, முதல்வரின் குடும்ப உறுப்பினர் ஒருத்தர் பெயரை பயன்படுத்தி, பாரம்பரியான, 'பம்ப்' நிறுவனத்திடம் கட்டப்பஞ்சாயத்து பண்ணிட்டு இருக்காருங்க... வடமாநில தொழிலதிபருக்கு ஆதரவா, பம்ப் நிறுவனத்தை மிரட்டுறதா சொல்றாங்க...
''இதனால, வெறுத்து போயிருக்கிற பம்ப் நிறுவனத்தினர், முதல்வரின் கவனத்துக்கு பிரச்னையை கொண்டு போக முயற்சி பண்ணிட்டு இருக்காங்க...'' என, முடித்தார் அந்தோணிசாமி.
''அடடே, விஷ்ணு பிரபுவா... பார்த்து பல வருஷமாச்சே... ஸ்டேட்ஸ்ல இருந்து எப்ப வந்தேள்...'' என, பெஞ்சுக்கு வந்த நண்பரிடம் குப்பண்ணா குசலம் விசாரிக்க, மற்றவர்கள் நடையை கட்டினர்.