வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: விமான பைலட் அமரும் இருக்கைக்குள் தோழியை அனுமதித்ததாக எழுந்த புகாரில் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ரூ. 30 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பைலட் மூன்று மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
கடந்த பிப்., 27ல், ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில் இருந்து, புதுடில்லிக்கு ஏர் இந்தியா விமானம் வந்திறங்கியது. அப்போது, விமானி ஒருவர், காக்பிட் எனப்படும் விமானிகள் அறைக்குள், தன் தோழியை அனுமதித்ததாக புகார் கூறப்படுகிறது. இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. விதிகளின்படி, விமானிகளை தவிர வேறு எந்த நபருக்கும் விமான பைலட் அறைக்குள் அனுமதி கிடையாது.
![]()
|
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து, டி.ஜி.சி.ஏ., எனப்படும் விமானப் போக்குவரத்து இயக்குனரகம் விசாரணை நடத்தியது. அதன் அறிக்கை இன்று (12 ம் தேதி) வெளியானது. அதில் நடந்த சம்பவத்தில் உண்மை இருப்பதால் குற்றம்சாட்டப்பட்ட பைலட் மூன்று மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ரூ. 30 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.