காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஒன்றியம், சிறுகாவேரிபாக்கத்தில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில், வட்டார கல்வி அலுவலகம், வட்டார வள மையம், நுாலக கட்டடம், வேளாண்மை விதை பண்ணை கிடங்கு, குழந்தை வளர்ச்சித்திட்ட அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.
இவ்வளாகத்தில், முறையான மழை நீர் வடிகால் வசதி இல்லாததால், நுாலக கட்டடம் மற்றும் குழந்தை வளர்ச்சித்திட்ட அலுவலகம் முன், மழை நீர் குளம்போல தேங்கியுள்ளது. 'ஏடிஸ்' கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது.
தினமும் நுாற்றுக்கணக்கான பொதுமக்கள் மற்றும் அரசு அதிகாரிகள் வந்து செல்லும் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மழை நீர் வடிகால்வாய் வசதி ஏற்படுத்தவேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.