காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் புதுப்பாளையம் தென்கோடியில், சிதம்பரேஸ்வரர் கோவில் உள்ளது. பழமையான இக்கோவிலில் உள்ள நடராஜ பெருமானுக்கு ஆண்டுதோறும் சித்திரை மாதம், திருவோணம் நட்சத்திர சிறப்புஅபிஷேகம் நடக்கிறது.
திருவோண நட்சத்திரமான நேற்று முன்தினம் உற்சவர் நடராஜ பெருமானுக்கு பால், தேன், இளநீர், சந்தனம், விபூதி, ஜவ்வாது உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் மஹாதீப ஆராதனை நடந்தது.
வாலாஜாபாத் அடுத்த, திம்மராஜம்பேட்டை கிராமத்தில் உள்ள பர்வதவர்த்தினி சமேத ராமலிங்கேஸ்வரர் கோவிலில் நேற்று முன்தினம் இரவு, 7:00 மணி அளவில் சிறப்பு அபிேஷகம் நடந்தது.
அதை தொடர்ந்து இரவு 9:00 மணி அளவில் சிவகாமி சமேத நடராஜர் மலர் அலங்காரத்தில் அருள்பாலித்தார். திம்மராஜம்பேட்டை சுற்றியுள்ள கிராமத்தினர் பங்கேற்று, சிவனை வழிபட்டனர்.