உடுமலை;எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகளுக்கு இணையாக, துணை மருத்துவப்படிப்புகளில் நல்லவாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்ட 'நீட்' தேர்வு ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார் அறிக்கை:
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., கிடைக்கவில்லை என்றாலும், துணை மருத்துவப் படிப்புகள் மாணவர்களுக்கு வாய்ப்பாக அமைய காத்திருக்கிறது.
அரசு மருத்துவக்கல்லுாரிகள், சுயநிதி மருத்துவக்கல்வி நிறுவனங்களில் பல்வேறு துணை மருத்துவப்படிப்புகளில் சேர்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதில், பி.பார்ம்., (நான்கு ஆண்டு), பி.எஸ்.சி., (நர்சிங்) (மூன்று ஆண்டுகள்) பி.பி.டி., (பிஸியோதெரபி) (நான்கு ஆண்டுகள் எட்டு செமஸ்டர்) மற்றும் ஆறு மாத உறைவிட இன்டர்ன்ஷிப், பி.ஏ.எஸ்.எல்.பி., (நான்கு ஆண்டுகள்),
பி.எஸ்.சி., ரேடியாலஜி அண்ட் இமேஜிங் டெக்னாலஜி (மூன்று ஆண்டுகள்), பி.எஸ்.சி., ரேடியோதெரபி (மூன்று ஆண்டுகள்), பி.எஸ்.சி., கார்டியோ (மூன்று ஆண்டுகள்), பி.ஓ.டி., அக்குபேஷனல் தெரபி (நான்கு ஆண்டுகள்) உள்ளிட்ட படிப்புகள் உள்ளது.
பி.பார்ம்., பி.ஏ.எஸ்.எல்.பி., படிப்புகளுக்கு, பிளஸ் 2வில் குறிப்பிட்ட பாடங்களின் கூட்டு சராசரியாகக் குறைந்தது, 40 சதவீதமும், எஸ்.சி., எஸ்.சி.ஏ., எஸ்.டி., மாணவர்கள் பிளஸ் 2-வில் தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும்.
மாணவர்கள் விண்ணப்பங்களை www.tnhealth.org, www.tn.gov.in ஆகிய இணையதளங்களில் பதிவிறக்கம் செய்யலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தோடு The Secretary, Selection- Commtee, Kilpauk, Chennai 104 என்ற பெயரில் எடுக்கப்பட்ட 400 ரூபாய்க்கான வரைவோலையையும் இணைத்து, நேரில் அல்லது தபாலில் அனுப்ப வேண்டும்.
இவ்வாறு, அவர் அதில் கூறியுள்ளார்.