உடுமலை:உடுமலை அருகே ஜல்லிபட்டி வீர ஜக்காம்மாள் தேவி கோவிலில், நடந்த பூவோடு எடுத்தல் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சித்திரை மாதத்தையொட்டி, கிராமப்புற கோவில்களில் தற்போது திருவிழா நடந்து வருகின்றன. அவ்வகையில், உடுமலை தளி ஜல்லிபட்டியில் சின்னக்கரடு பகுதியில் புகழ்பெற்ற வீர ஜக்கம்மாள் தேவி கோவில் உள்ளது.
இக்கோவிலில், முக்கியத்துவம் வாய்ந்த மகா சித்திரை விழா நடந்து வந்தது. இதில் நேற்றுமுன்தினம் இரவு, 9:00 மணிக்கு திருமூர்த்திமலையிலிருந்து ஏராளமான பக்தர்கள் தீர்த்தம் எடுத்து வந்தனர்.
திருவிழாவில் நேற்று காலை, அபிேஷகம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் நடந்தது. தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. மதியம், 2:00 மணிக்கு அலகு குத்துதல், பூவோடு எடுத்தல் நிகழ்ச்சி நடந்தது.