மதுராந்தகம்:மதுராந்தகம் நகரத்திலிருந்து சித்தாமூர் செல்லும் நெடுஞ்சாலையில், நகராட்சி அலுவலக கட்டடம் அருகே குறுவட்ட அளவர் குடியிருப்புடன் கூடிய அலுவலக கட்டடம், பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டது.
இந்த அலுவலக கட்டடம், தற்போது பூட்டியே கிடப்பதால், பயன்பாடின்றி வீணாக உள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, குறுவட்ட அளவர் குடியிருப்புடன் கூடிய அலுவலகத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.