திருப்பூர்,;காரமடையில் நடக்கும் மாநில கபடி சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க, திருப்பூர் மாவட்ட பெண்கள் அணி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இன்று துவங்கிய, 14ம் தேதி வரை, கோவை, காரமடையில், 70 வது மாநில பெண்கள் சாம்பியன்ஷிப் கபடி போட்டி நடக்கிறது. இதில் பங்கேற்கும், திருப்பூர் மாவட்ட பெண்கள் கபடி அணிக்கு ஏ.வி.பி., மெட்ரிக் பள்ளியில் பயிற்சி வழங்கப்பட்டது.
மாவட்ட கபடி கழகம் நடத்திய இம்முகாமில், 16 பெண்கள் பங்கேற்றனர். பயிற்சி முகாமை ஏ.வி.பி., கல்வி நிறுவனங்களின் தாளாளர் கார்த்திகேயன் ஒருங்கிணைத்தார்.
மாநில கபடி போட்டிக்கு, மாவட்ட பெண்கள் அணி வீராங்கனைகளை வழியனுப்பும் விழாவுக்கு, கபடி கழக மாநில பொருளாளர் ஜெயசித்ரா சண்முகம் தலைமை வகித்தார். மாவட்ட கபடி கழக சேர்மன் முருகானந்தம், துணைத்தலைவர் ராமாஸ், செய்திதொடர்பாளர் சிவபாலன், தேர்வுக்குழு தலைவர் ருத்ரன் முன்னிலை வகித்தனர்.
போட்டியில் பங்கேற்கும் வீராங்கனைகளுக்கு, டிரேக்சூட், பேக், ஷூ மற்றும் விளையாட்டு சீருடைகள் நிர்வாகிகள் வழங்கினர். முன்னதாக, மாவட்ட கபடி கழக நடுவர் குழு தலைவர் முத்துசாமி வரவேற்றார். மாவட்ட இணை செயலாளர் வாலீசன், கந்தசாமி, கபடி வளர்ச்சிக்குழு தலைவர் ரவிச்சந்திரன், நடுவர்குழு கன்வீனர் சேகர், தர்மராஜ், மணிகண்டன், குமரேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.