''வாங்க ... முதல்ல சாம்பிள் பிரியாணியை சாப்பிட்டு பாருங்க ... நல்லா இருந்தா அப்புறம் ஆர்டர் பண்ணி சாப்பிடுங்க!''
- - வாடிக்கையாளர்களை டேஸ்ட் பார்க்க வைத்து, அசத்துகிறார் நாட்டுக்கோட்டை பாரடைஸ் பிரியாணி நிறுவனர் ஜெயகார்த்திகேயன்.
கோவை சாயிபாபா காலனி கண்ணன் டிபார்மென்ட் ஸ்டோர் அருகில், நாட்டுக்கோட்டை பாரடைஸ் பிரியாணி ஓட்டல் புதிதாக திறக்கப்பட்டுள்ளது.
இந்த ஓட்டலின் பிரியாணி தயாரிப்பு, நாட்டுக்கோட்டை ஸ்டைலில் சும்மா கமகமக்கிறது. பிரியாணிக்கு காம்பினேஷனாக சிக்கன் மிளகு கறியும், மட்டன் மிளகு கறியும் 'சைடு டிஷ்' ஆக கிடைக்கிறது.
வாடிக்கையாளர்கள் சாப்பிட்டு முடித்தவுடன், குளோப் ஜாமுன் காம்பிளிமென்டாக கொடுக்கின்றனர். சாப்பிட்டு விட்டு வெளியே வரும் வாடிக்கையாளர்களின் முகத்தில் அத்தனை திருப்தி!
குடும்பத்துடன் அமர்ந்து சாப்பிட, ஏ.சி., அறையும், கார் பார்க்கிங் வசதியும் உள்ளதால், வார விடுமுறையில் ஒரு விசிட் அடிக்கலாம்!
தொடர்புக்கு: 96777 06868.
பிரியாணி எல்லா ஓட்டல்களிலும் கிடைக்கிறது. எங்கள் பிரியாணியில் உள்ள வித்தியாசம், அதன் சுவையும், மணமும்தான். மசாலா பொருட்கள், எண்ணெய் எல்லாம் தரமாக பயன்படுத்துகிறோம். ஒருமுறை சாப்பிட வரும் கஸ்டமர், மறுமுறையும் கண்டிப்பாக வருவார் என்ற நம்பிக்கை உள்ளது.
- ஜெயகார்த்திகேயன் ஓட்டல் உரிமையாளர்