கரூர்:''தமிழகத்தில் மணல் கொள்ளை தொடங்கி விட்டது,'' என, கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தெரிவித்தார்.
அவர், கரூரில் நிருபர்களிடம் கூறியதாவது:
எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, முதல்வராக இருந்த போது, தமிழகத்தில் மணல் அள்ள தடை இருந்தது. ஆனால், தி.மு.க., ஆட்சி வந்த பிறகு மெல்ல மெல்ல மணல் அள்ளப்பட்டது. தற்போது மணல் கொள்ளை தாராளமாக நடக்கிறது.
இதனால், ஆறுகளில் நீர்வளம் பாதிக்கப்பட்டு, விவசாயம் கேள்விக்குறியாகும். தமிழக அரசு மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.