அருப்புக்கோட்டை-அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் 2002 ல் பயின்ற மாணவர்கள் 21 ஆண்டுகளுக்கு பிறகு, சந்தித்து கொண்டனர். தங்களுக்கு பாடங்கள் சொல்லிக் கொடுத்த ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு அளித்து கௌரவித்தனர்.
மறைந்த ஆசிரியர்கள், தங்களுடன் படித்த மாணவர்கள் நினைவாக பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனர்.
பள்ளியில் பேவர் பிளாக் கல் பதிப்பதற்காக தங்களின் பங்களிப்பாக ஒரு லட்சம் ரூபாய் அளித்தனர். தாங்கள் படித்த பள்ளியின் தேவைகளை வருங்காலங்களில் பூர்த்தி செய்வதாக, பள்ளி நிர்வாகத்தினரிடம் உறுதி அளித்தனர்.