தேவகோட்டை--உலக சிலம்ப விளையாட்டு சங்க சர்வதேச செயலாளர் ரமேஷ்குமார், துணை தலைவர் கார்த்திக், மலேசியா எம்.ஜி.ஆர். சிலம்ப நிறுவனர் மோகனராமன் இணைந்து மலேசியாவில் சர்வதேச சிலம்ப போட்டிகளை நடத்தினர்.
உலக சிலம்ப விளையாட்டு சங்கத் நிறுவன தலைவர் சுதாகரன் தலைமையிலும் மலேசியா காசிராஜன் முன்னிலையில் சிலம்ப போட்டிகள் நடந்தன. இப்போட்டியில்200க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்.
15 வயதுக்கு மேற்பட்ட பிரிவில் ஸ்ரீ வர்தினி ஒற்றை கம்பு போட்டியில் தங்கபதக்கமும், தொடுமுறை பிரிவில் வெள்ளி பதக்கமும், 13 வயதுக்கு மேற்பட்ட பிரிவில் விக்னேஸ்வரன் ஒற்றை கம்பு போட்டியில் தங்கபதக்கமும் தொடுமுறை பிரிவில் வெள்ளி பதக்கமும்,12 வயதுக்கு மேற்பட்ட பிரிவில் ஸ்ரீ நந்தினி ஒற்றை கம்பு போட்டியில் தங்கபதக்கமும் தொடுமுறை பிரிவில் வெள்ளி பதக்கமும்,9 வயதுக்கு மேற்பட்ட பிரிவில் ஸ்ரீதரன் ஒற்றை கம்பு போட்டியில் தங்கபதக்கமும் தொடுமுறை பிரிவில் வெள்ளி பதக்கமும், 6 வயதுக்கு மேற்பட்ட பிரிவில் ஸ்ரீயாழினி ஒற்றை கம்பு போட்டியில் தங்கபதக்கமும் தொடுமுறை பிரிவில் வெள்ளி பதக்கமும் பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவ மாணவியரையும் பயிற்சிஅளித்து மாணவர்களை தலைமையேற்று அழைத்து சென்று சிவகங்கை மாவட்ட செயலாளர் எம். பக்கீர் முகமதுவை சிவகங்கை மாவட்ட சிலம்பம் சங்கம் சார்பிலும்,நேசம் சிலம்பம் அகாடமி சார்பிலும் பாராட்டினர்.