கள்ளக்குறிச்சி : கல்வராயன்மலையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்து, ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை பகுதியில் வீட்டில் பதுக்கி வைத்து கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் எஸ்.பி., மோகன்ராஜ் உத்தரவின் பேரில் கரியாலுார் சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் நேற்று எருக்கம்பட்டு, வேங்கோடு ஆகிய பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர்.
அதில், எருக்கம்பட்டு சேர்ந்த சின்னையன் மகன் கோவிந்தன்,48; வேங்கோடு சேர்ந்த ஆண்டி மகன் சந்திரன்,39; ஆகியோர் வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
தியாகதுருகம்
தியாகதுருகம் மலையம்மன் கோவில் அருகே நேற்று முன்தினம் மாலை 4:00 மணிக்கு சப் இன்ஸ்பெக்டர் மூர்த்தி தலைமையில் போலீசார் வாகன ரோந்து சென்றனர்.
சந்தேகத்தின் பேரில் அந்த பகுதியில் நின்றிருந்த இருவரை பிடித்து விசாரித்து ,சோதனை செய்தனர்.
இதில் பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த 100 கிராம் கஞ்சாவை கண்டுபிடித்தனர்.
அவர்களின் விசாரித்ததில் புக்குளம் மந்தவெளியைச் சேர்ந்த குப்புசாமி மகன் கவுசி, 19; இளங்கோவன் மகன் பரத், 19; என்பதும் தெரியவந்தது.
தியாகதுருகம் போலீசார் இருவரையும் கைது செய்து, கஞ்சாவை கைப்பற்றினர்.