பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த பனிக்கன்குப்பம் அரசு அண்ணா பொறியியல் கல்லுாரி ஆண்டு விழாவில் எஸ்.பி., ராஜாராம்மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்.
பண்ருட்டி அடுத்த பனிக்கன்குப்பம் அரசு அண்ணா பொறியியல் கல்லுாரியில் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா நடந்தது. கல்லுாரி புல முதல்வர் முத்துகுமரன் தலைமை தாங்கினார். முன்னாள் புல முதல்வர் செந்தில்குமார், துறை தலைவர்கள் ராமசந்திரன், உமாமகேஸ்வரி, மங்கையர்கரசி, மாலா, ரேணுகா முன்னிலை வகித்தனர்.
விழாவில், எஸ்.பி., ராஜாராம் பங்கேற்று விளையாட்டு போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி பேசினார்.