சோழவந்தான்--சோழவந்தான் முள்ளிப்பள்ளம் திருநாவுக்கரசர் மடத்தில் 122 ஆண்டுகளுக்குப் பின் புனரமைப்பு பணிகள் முடிந்து நேற்று கும்பாபிஷேகம் நடந்தது.
மே 11ல் புதிய பீடத்தில் விநாயகர், திருநாவுக்கரசர் சிலைகளை பிரதிஷ்டை செய்து வாஸ்து சாந்தி பூஜை நடந்தது. சிவாச்சாரியார் சிவபாபு தலைமையில் கணபதி ஹோமத்துடன் 2 கால யாக பூஜை நடந்தது.
தொடர்ந்து கடம் புறப்பாடாகி கோயிலை வலம் வந்து கருவறை விமான கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது. விநாயகர், திருநாவுக்கரசருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.
மடத்தின் குருபூஜை இன்று (மே 13)ல் சித்திரை மாத சதயநட்சத்திரத்தில் நடைபெறும். திருமால் பிள்ளை வகையறாக்கள் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.