அவலுார்பேட்டை: அவலுார்பேட்டை அருகே குடும்பத் தகராறில் பூச்சி மருந்து குடித்த பெண் இறந்தார்.
அவலுார்பேட்டை அடுத்த மேல்செவலாம்பாடி கிராமத்தைச் சேர்ந்த சுதாகர் மனைவி சுமித்ரா, 37; இவர்களுக்கு 15 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.
குடும்ப பிரச்னை காரணமாக மனமுடைந்த சுமித்ரா நேற்று முன்தினம் இரவு 7:00, மணிக்கு அவரது நிலத்தில் இருந்த பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார்.
உடன், சேத்பட் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.
புகாரின் பேரில், அவலுார்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.