விழுப்புரம்: சவுதி அரேபியாவில் இருந்து வந்த மகனைக் காணவில்லை என போலீசில், தந்தை புகார் கொடுத்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மாதேவி அடுத்த வீரவாநல்லுாரைச் சேர்ந்தவர் முப்பிடாதி மகன் கார்த்திகேயன், 29; டிப்ளமோ மெக்கானிக்கல் படித்துவிட்டு, சவுதி அரேபியாவில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வேலை செய்து வருகிறார்.
கடந்த 4ம் தேதி சென்னைக்கு வந்த இவரை வரவேற்க, முப்பிடாதி 30 நிமிடம் தாமதமாக சென்றுள்ளார்.
இதனால், கோபித்துக்கொண்டு சென்ற கார்த்திகேயன், பிறகு விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து பேசுவதாக, முப்பிடாதியிடம் மொபைல் போனில் தொடர்பு கொண்டு கூறியுள்ளார். அதன் பிறகு, கார்த்திகேயனைக் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்து முப்பிடாதி கொடுத்த புகாரின்பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.