பெங்களூரு-''தேசிய கட்சியினர், கருத்து கணிப்புகள் வெளியிட்டு மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர்.- ம.ஜ.த., கட்சி எதற்கும் துவண்டு போகாது. விடிந்தவுடன் தேர்தல் முடிவுகள் வெளியாகி ம.ஜ.த., ஆட்சி அமைவது உறுதி,'' என, அக்கட்சியின் மாநில தலைவர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள்படி, எந்த கட்சிக்கும் முழு பெரும்பான்மை கிடைக்காது என்று தெரிய வந்துள்ளது.
மீண்டும் ம.ஜ.த., வீட்டு வாசல் கதவை தட்ட வேண்டிய நிலை, தேசிய கட்சிகளுக்கு ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து, ம.ஜ.த., மாநில தலைவர் இப்ராஹிம் பெங்களூரில் நேற்று கூறியதாவது:
தேசிய கட்சிகளிடம் பணம் உள்ளது. ம.ஜ.த., விடம் பணம் இல்லை. பணம் இருப்பதால், இரண்டு கட்சிகளும் தேர்தலுக்கு பின் 'சர்வே' நடத்தி உள்ளனர்.
கருத்து கணிப்புகள் வெளியிட்டு மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர்.- ம.ஜ.த., கட்சி எதற்கும் துவண்டு போகாது. விடிந்தவுடன் தேர்தல் முடிவுகள் வெளியாகி ம.ஜ.த., ஆட்சி அமைவது உறுதி.
இம்முறை தேர்தல் பண பலத்தில் நடந்துள்ளது. மாநிலத்தில் ம.ஜ.த., 'கிங் மேக்கர்' ஆகும். எங்கள் வேட்பாளர்கள் எந்த கட்சியின் ஆசை வார்த்தைக்கும் பலியாக மாட்டார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.