கரூர்: கரூர்-வாங்கல் சாலையில் உள்ள, ஆர்.டி.ஓ., அலுவலக வளாகத்தில்,
சார்பதிவாளர் அலுவலகம், வணிக வரி அலுவலகங்கள் உள்ளன.
அந்த வளாகத்தில், மின் கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில், பெரும் பாலான கம்பங்களில் பொருத்தப்பட்டுள்ள விளக்குகள், இரவு நேரத்தில் எரிவது இல்லை. மேலும், பல கம்பங்கள் சாய்ந்த நிலையில் உள்ளது.
கரூரில் அவ்வப்போது, பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால், சாய்ந்த நிலையில் உள்ள கம்பம் கீழே விழும் அபாயம் உள்ளது. இதனால், சாய்ந்த மின் கம்பத்தை உடனடியாக அகற்றி விட்டு, புதிய கம்பத்தை நட வேண்டும்.