இளநீருக்குள் இருப்பது தண்ணீர் அல்ல. 'எண்டோஸ்பெர்ம்' எனப்படும் முளை சூழ்தசை செல்கள். எண்ணெய்ச் சத்தும் புரதமும் மாவுச் சத்தும் செறிவாக இருப்பதால், கருத்தரித்தலின் போது பூக்கும் தாவரங்களின் விதைக்குள்ளே உருவாகும் திசுதான் இது. அரிசியின் உள்ளே கிடைக்கும் சூழ்தசை செல்களையே சாதமாக உண்கிறோம், கோதுமையின் சூழ்தசை செல்கள்தான் ரொட்டிமாவு. ஆரம்பத்தில் நீர்ம நிலையில் இருக்கும் இந்த சூழ்தசை செல்கள் தேங்காய் முற்ற முற்ற தடிமனாகி வெள்ளை நிறத்தில் தேங்காயாக மாறுகிறது.
தகவல் சுரங்கம்
உலக அன்னையர் தினம்
'மாதா, பிதா, குரு, தெய்வம்' என நம் கலாசாரம் அன்னையருக்கு தான் முதலிடம் தந்து இருக்கிறது. அவ்வகையில் அன்னையே நம் முதல் கடவுள். அன்னை இல்லையெனில் நாம் இந்த மண்ணில் பிறந்திருக்க முடியாது. எந்த சூழ்நிலையிலும் அவர்களை கைவிடக்கூடாது. வயதான காலத்திலும் அவர்களை அன்போடு நடத்த வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக, ஆண்டுதோறும் மே இரண்டாவது ஞாயிறு (மே 14) உலக அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. அன்னா ஜார்விஸ் என்ற பெண்மணியால் 1908ல் இத்தினம் தொடங்கப்பட்டது.